செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

Published On 2016-09-29 08:07 GMT   |   Update On 2016-09-29 08:07 GMT
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளின் 5 முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தங்கள் ராணுவத்தினர் மீது இந்தியா அத்துமீறி தாக்கியதாகவும், அதில் 2 வீரர்கள் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சிகளின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க உள்ளதாக தெரிகிறது.

Similar News