செய்திகள்

பிரதமர் மோடி கேரளா வந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் விசாரணை தொடங்கியது

Published On 2016-09-28 03:38 GMT   |   Update On 2016-09-28 03:38 GMT
பிரதமர் மோடி கேரளா வந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் அதன் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது
கோழிக்கோடு:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த பா.ஜனதா தேசிய குழு கூட்டத்தில் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். 24-ந் தேதி நடக்காவு போலீசுக்கு வந்த ஒரு போனில் பேசியவர், கேரளா வரும் பிரதமர் மோடி மீது வெடிகுண்டு வீசப்படும் என்று இந்தியில் கூறினார். இதுதொடர்பாக போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். போலீஸ் விசாரணையில், அந்த போன் அழைப்பு இணையதளம் மூலம் வந்த அழைப்பு என்றும், அது போலி எண் என்றும் தெரியவந்துள்ளது. அந்த அழைப்பு வளைகுடா நாட்டில் இருந்து வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடந்துவருவதால் மற்ற விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.

Similar News