செய்திகள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேதார்நாத் பயணம்

Published On 2016-09-27 13:19 GMT   |   Update On 2016-09-27 13:19 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி டேராடூன் சென்றுள்ளார்.
டேராடூன்:

உலகப்புகழ் பெற்ற கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று டேராடூன் சென்றடைந்தார். அவருக்கு உத்தரகாண்ட் அரசு கவர்னர் கே.கே.பால், முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் தலைமைச்செயலாளர் சத்ருகன் சின்ஹா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளை காலை 8.25 மணிக்கு கேதார்நாத் செல்லும் பிரணாப் முகர்ஜி ஆலய வழிபாட்டிற்கு பின் நாளை மதியம் டேராடூன் திரும்புகிறார். நாளை மறுநாள் (செப்டம்பர் 29) ஹரித்வார் செல்லும் ஜனாதிபதி, அங்கு நடைபெறும் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்று மாலை டெல்லி திரும்புகிறார்.

டேராடூனில் தங்கியிருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாதுகாக்கும் பணியில் சுமார் 2400 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் கேதார்நாத் கோயிலுக்கு சென்ற பிரணாப் முகர்ஜி அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பாதியில் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Similar News