செய்திகள்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது: கர்நாடக சட்டமேலவை கூட்டத்தில் தீர்மானம்

Published On 2016-09-23 09:25 GMT   |   Update On 2016-09-23 09:25 GMT
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது என கர்நாடக சட்டமேலவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூர்:

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் அதனை நிறைவேற்ற தயாராக இல்லை. இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம், அமைச்சரவை கூட்டம் நடத்தி அடுத்தடுத்து தீவிர ஆலோசனை நடத்திய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கடைசியாக சட்டமன்றத்தை கூட்டி முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

அதன்படி இன்று கர்நாடக சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சட்டமேலவைக் கூட்டத்தில், மேலவை உறுப்பினர்கள் இதுபற்றி விவாதித்தனர். அப்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற கருத்தையே பெரும்பாலான உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரானது பெங்களூர், மைசூர் ஆகிய நகரங்களின் குடிநீர் தேவைக்குத்தான் உள்ளது என்றும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News