செய்திகள்
வீரபத்ரசிங்

இமாசலப்பிரதேச முதல்-மந்திரி மனைவியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை

Published On 2016-08-09 10:49 GMT   |   Update On 2016-08-09 10:49 GMT
இமாசல பிரதேச முதல்-மந்திரி மனைவியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

புதுடெல்லி:

இமாசலபிரதேச முதல்-மந்திரியாக வீர்பத்ரசிங் (காங்கிரஸ்) இருந்து வருகிறார். இவர் மீதும் இவரது மனைவி பிரதீபா மற்றும் குடும்பத்தினர் மீதும் மாநில ஊழல் தடுப்பு பிரிவில் பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக வீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா, மகன், மகள், ஆகியோருக்கு 2010-ம் ஆண்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இவர்கள் மீதான வழக்குகள் 2015-ம் ஆண்டு மாநில போலீசிடம் இருந்து சி.பி.ஐ க்கு மாற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் பண பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கப்பிரிவும் தனியாக வழக்குகள் பதிவு செய்துள்ளது. இன்று இது தொடர்பாக வீரபத்ரசிங் மனைவி பிரதீபாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

Similar News