செய்திகள்

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு

Published On 2016-04-05 08:26 GMT   |   Update On 2016-04-05 08:26 GMT
பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா:

இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.

அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ கேண்டீன்களில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.

Similar News