உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது- புகைப்படம் எடுத்து மிரட்டியது அம்பலம்

Update: 2022-06-26 10:51 GMT
  • எனது கணவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 14 வயது 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.
  • எனது மகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 14 வயது 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சிமுத்து என்ற வாலிபர் எனது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி காதலில் விழ வைத்துள்ளார்.

பின்னர் எனது மகளை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து எனது மகளை மிரட்டி பலவந்தப்படுத்தி உள்ளார். மேலும் அதனை போட்டோ எடுத்து மிரட்டி உள்ளார்.

நான் சொல்வதை கேட்காவிட்டால் பேஸ்புக்கில் போட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளார். எனது மகளின் வாழ்க்கையை நாசப்படுத்திய பேச்சிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News