உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடி அருகே பாலத்தில் இருந்து தவறிவிழுந்தவர் பலி

Update: 2022-07-03 05:27 GMT
  • மேலபரவு செல்லும் சாலையில் உள்ள கழிவுஓடை பகுதியில் நின்று பேசி கொண்டிருந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலியானார்.
  • இதுகுறித்து குரங்கனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே முந்தல் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(28). ஆட்டோ டிரைவர்.

சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மேலபரவு செல்லும் சாலையில் உள்ள கழிவுஓடை பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்தார்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து குரங்கனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News