உள்ளூர் செய்திகள்

புதிய நலத் திட்ட உதவிகளை பெற தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-20 09:13 GMT   |   Update On 2022-07-20 09:13 GMT
  • அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு புதிய நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
  • தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சோ்த்து ரூ. 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்துக்கு தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கு புதிய நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்களில் தோ்ச்சி பெறும் தொழிலாளா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தவா்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள் எழுதும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு பயிற்சி, உதவித்தொகை போன்ற புதிய நலத் திட்டங்களில் பயனடைய தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழிலாளியின் மாத ஊதிய உச்ச வரம்பு அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி சோ்த்து ரூ. 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியிலோ அல்லது 044-24321542, 89397-82783 என்ற செல்எபோன் எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News