உள்ளூர் செய்திகள்

பீடத்தின் வெளிப்புறத்தை சுற்றி 40 அடி உயரத்துக்கு சாரம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளதை படத்தில் காணலாம்

கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் பீடத்தை சுற்றி 40 அடி உயரத்துக்கு சாரம் அமைக்கும் பணி

Published On 2022-06-20 11:51 GMT   |   Update On 2022-06-20 11:51 GMT
  • கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.
  • முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெறஉள்ளது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக் கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.

தற்போதுரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற உள்ளது. இந்தப் பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெறஉள்ளது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரி வந்து உள்ளது.

இவை படகுகள் மூலம் சிலை அமைந்துஉள்ள பாறைக்கு படகுமூலம் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை சுற்றி ரசாயன கலவை பூசுவதற்காக இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது முதல் கட்டமாக திருவள்ளுவர் சிலையின் பீடத்தைச் சுற்றி இரும்பு பைப்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது 40 அடி உயரத்துக்கு திருவள்ளுவர் சிலை பீடத்தின் வெளிப்புறத்தை சுற்றி சாரம் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது.

தற்போது திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் இருந்து கொண்டை பகுதி வரை சாரம் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News