உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நூதன முறையில் 600 பவுன் நகை மோசடி செய்த பெண் கைது - போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-08-23 08:52 GMT   |   Update On 2023-08-23 08:52 GMT
  • சுப்புலட்சுமி பெண்களிடம் அதிகமான வட்டி பெற்று தருவதாகவும், மேலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் செய்தும் வந்துள்ளார்.
  • இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணணை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே அகரம் பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி (வயது42) என்பவர் தூத்துக்குடி எம்.சவேரியார்புரம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வசித்து வருகிறார். இவர் இப்பகுதி பெண்களிடம் நெருங்கி பழகி மகளிர் சுய உதவிக்குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில் பெண்களிடம் அதிகமான வட்டி பெற்று தருவதாகவும் மேலும் பல்வேறு கவர்ச்சி கரமான அறிவிப்புகளையும் செய்தும் வந்துள்ளார். இதன்படி நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களிடம் சுமார் 600 பவுனுக்கு மேல் தங்க நகைகளை பெற்று சுப்புலட்சுமி தலை மறைவாகி விட்டார். இதனால் நகைகளை கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணணை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். புகார் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நூதன முறையில் நகைகளை மோசடி செய்த சுப்புலட்சுமி மற்றும் அவருடன் இருந்த ஒரு ஆண் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடம் மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News