உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் பஸ்சின் முன் பகுதியில் சிக்கி இருப்பதையும், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களையும் படத்தில் காணலாம்.

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்

Published On 2023-11-22 05:42 GMT   |   Update On 2023-11-22 05:42 GMT
  • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
  • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News