உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-06-11 09:40 GMT   |   Update On 2022-06-11 09:40 GMT
  • புளியங்குடி முப்பெரும் தேவியர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

புளியங்குடி:

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரிய பாளையத்து பவானியம்மன், நாககன்னியம்மன், நாகம்மன் கோவிலில் மாதந்திர விளக்கு பூஜை நடைபெற்றது.

அதன்படி வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கொரோனா முழுவதும் அழிந்து போகவும், சிறப்பு மந்திரங்களும் சிறப்பு பூஜைகளும் இரவு 7 மணிக்கு 508 சிறப்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடி திருவிளக்கில் தீபமேற்றி பூஜை நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மன்களுக்கு பால், மஞ்சள், தயிர், குங்குமம் உள்பட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

பின் மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை வரை சிறப்பு அருள் வாக்கு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News