உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு மாணவிக்கு உதவி தொகை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன் உள்ளனர்.


தூத்துக்குடியில் புதுமைப்பெண் திட்ட விழா: மாணவிகள் பெற்றோர் ,பேராசிரியர்கள் பேச்சை கேட்டு நடக்கவேண்டும் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை

Published On 2022-09-06 09:04 GMT   |   Update On 2022-09-06 09:04 GMT
  • தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
  • மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 383 மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி பேசினார்.

தூத்துக்குடி:

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்ட தொடக்க விழா அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 383 மாணவிகளுக்கு உதவித்தொகையை வழங்கி பேசினார்.

தந்தையாக..

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அத்தனை மாணவிகளுக்கும் தந்தையாக விளங்கி வருகிறார். பெண்கள் உயர வேண்டும் என்ற வகையில் இந்த திட்டத்தை தந்துள்ளார். மாணவிகள் இடைநிற்காமல் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற வகையில் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவிகள், தாய், தந்தை, கல்லூரி பேராசிரியர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். இந்த திட்டத்தால் மாணவிகள் உயர்ந்து உள்ளனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி , சுப்பிரமணியன், சுரேஷ் காந்தி இளையராஜா, மற்றும் தளபதி பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News