உள்ளூர் செய்திகள்

கால்நடை தீவன உற்பத்தியை பெருக்க விவசாயிகளுக்கு மானியம் - கலெக்டர் தகவல்

Published On 2022-09-21 09:19 GMT   |   Update On 2022-09-21 09:19 GMT
  • கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
  • புல் அறுவடை செய்தல் மற்றும் புல் நறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் போன்றவை வாங்க ஒரு விவசாயிக்கு 25 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

திருச்சி :

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தில் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானிய விலையில் பண்ணை கருவிகளை வழங்கி, அவர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3,200 மெட்ரிக் டன் அதற்கு மேலாக ஊறுகாய் புல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, புல் அறுவடை செய்தல் மற்றும் புல் நறுக்கும் இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் போன்றவை வாங்க ஒரு விவசாயிக்கு 25 சதவீத மானியம் அல்லது ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

மேலும், இத்திட்டத்தில் சேர்ந்து தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், தனி நபர் , பால் பண்ணையாளர்கள் , பால் உற்பத்தியாளர்கள் , கால்நடை வளர்ப்போர்கள் , கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள் வருகிற 26ஆம் தேதிக்குள் அவரவர் கிராமத்துக்கு உள்பட்ட அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விபரங்கள் தெரிந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News