உள்ளூர் செய்திகள்

நகராட்சி நகர மன்ற சாதாரண கூட்டம்

Update: 2022-09-27 07:23 GMT
  • நகராட்சி நகர மன்ற சாதாரண கூட்டம் நடந்தது
  • 33 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி:

முசிறி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் சுரேஷ், ஆணையர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டு அவரவர் வார்டுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் பாதை சரி செய்தல் மின்சார வசதி போன்ற அடிப்படை தேவைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். மன்றத்தில் 33 தீர்மானம் வைக்கப்பட்டு அனைத்தும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News