உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை

Published On 2022-07-11 09:47 GMT   |   Update On 2022-07-11 09:47 GMT
  • ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • எந்தவித பணப்பயன் வழங்கப்படாமல் இருக்கிறது.

திருச்சி:

தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் நாகூர் கனி தலைமை தாங்கினார். சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சையது உமர் நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு நான் முதல்வன் மற்றும் கல்லூரி கனவு திட்டம் போன்ற பல நல்ல சமூக நீதி கொள்கைகள் மூலம் திராவிட மாடல் ஆட்சியை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருப்பது போல நமது மாநில பல்கலைக்கழகங்களிலும் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும். பெரும்பாலான தமிழக பல்கலைக்கழகங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு உரிய பணபலனோ அல்லது பணி ஓய்வுக்குரிய பணமோ அல்லது எந்தவித பணப்பயன் வழங்கப்படாமல் இருக்கிறது.

எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து பண பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News