உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்

Published On 2023-08-14 08:35 GMT   |   Update On 2023-08-14 08:35 GMT
  • திருச்சியில் துப்புரவு பணியாளர்கள் கூலி உயர்வு கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
  • அமைச்சர் கே.என். நேரு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது

திருச்சி,

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலத்தில் தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் 150 பேரை பணியில் அமர்த்தி உள்ளனர். துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தினக்கூலியாக ரூ. 570 தருவதாக கூறி ரூ.430 மட்டுமே வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது.மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வார விடுமுறை அளிக்காமல் இருந்து வந்தனர். இதனை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை திருச்சி அண்ணா சிலை அருகே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.அப்பொழுது அந்த வழியே லால்குடிக்கு காரில் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, போராட்டத்தில் ஈடுபட்டோரை கண்டு, காரில் இருந்து இறங்கி வந்தார். பிறகு அங்கு திரண்டு இருந்த துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது உங்களது நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் வாக்குறுதி அளித்தன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News