உள்ளூர் செய்திகள்

கத்தியை காட்டி பணம் பறித்த 8 ரவுடிகள் கைது

Published On 2022-11-26 09:44 GMT   |   Update On 2022-11-26 09:44 GMT
  • கத்தியை காட்டி பணம் பறித்த 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்
  • திருச்சியில் பல்வேறு இடங்களில்

திருச்சி:

திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 44). இவர் அந்த பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ6.ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இது குறித்து ஏழுமலை கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (25), வீரன் (21), மோகன் குமார் (24) ஆகியோர் ஏழுமலையிடம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. . இதையடுத்து கோட்டை போலீசார் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி பீமநகர் கண்டித் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (22) இவர் அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( 24), பாரதிதாசன், வீரமணி (33), கிஷோர் கண்ணன் (4)ஆகிய 4 பேர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து சதீஷ்குமார் பாலக்கரை போலீஸ் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

திருச்சி பாலக்கரை எடத்தெரு பிள்ளைமா நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (32 )இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பாலக்கரை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (24) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார்.இது குறித்து ஸ்டீபன் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் ராஜனை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் திருச்சி மாநகரில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News