உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலை பாலாற்றில் ஆக்கிரமிப்பு - தென்னை மரங்கள் அகற்றம்

Published On 2022-09-24 06:25 GMT   |   Update On 2022-09-24 06:26 GMT
  • பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
  • 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர்.

உடுமலை:

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இது தவிர பாலாற்றில் இருந்து வரும் தண்ணீரும் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. பாலாற்றில் பல இடங்களில் விவசாயிகள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த தென்னை மரங்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பொதுப்பணித்துறை வருவாய்த்துறை, போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப்ரல் மாதம் அகற்றினர். மேலும் விவசாயிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை . இதையடுத்து திருமூர்த்தி அணையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் பாலாற்றில் நடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட மரக்கன்று மற்றும் தென்னை மரங்களை அதிகாரிகள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். தொடர்ந்து அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News