உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது

Published On 2023-05-24 11:19 GMT   |   Update On 2023-05-24 11:19 GMT
  • காலை 10மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
  • வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10மணிக்குதிருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் முதலாவதாகவிவசா யிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்க ங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.

மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமை த்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும்வேளாண் பொறியியல்துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமை க்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசா யிகள்நுண்ணீர் பாசனம்அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர்நலத்துறை மற்றும் வேளாண்சார்ந்த துறைகளால் அமைக்கப்பட வுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள்பயன்பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News