உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

செல்போன் செயலி மூலம் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு-ஆசிரியர்கள் புலம்பல்

Published On 2022-09-16 08:32 GMT   |   Update On 2022-09-16 08:32 GMT
  • 19-ந் தேதி முதல் 30ந் தேதி வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்த கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
  • 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் :

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்படும் ஒன்று முதல் 5-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.திட்டத்தின்கீழ் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான வளரறி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தொகுத்தறி மதிப்பீடு செய்ய அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற 19-ந்தேதி முதல் 30ந் தேதி வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- இந்த மதிப்பீடு 1 முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 4-ம்வகுப்பு, 5-ம் வகுப்புக்கு பிரின்ட் அவுட் முறையில் தேர்வு நடக்கிறது. மாணவர் வருகை, ஆசிரியர் வருகை, எமிஸ் பதிவேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் டிஜிட்டல் மொபைல் செயலி மூலம் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.தற்போது தொகுத்தறி மதிப்பீட்டையும் செல்போனில் மேற்கொள்ளும் பட்சத்தில் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடும்.

இதற்கென பிரத்யேக மொபைல் டேப்லெட் இருந்தால் கையாள எளிமையாக இருக்கும். பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் இதற்கான ஏற்பாடுகள் செய்தால் உபயோகமாக இருக்கும்.1 முதல் 5-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக கற்றல் வாய்ப்புகளை மாணவர்கள் இழந்ததாக கூறப்படுகிறது. இதனை மீண்டும் ஈடு கட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது.தற்போது இயல்பு நிலை திரும்பிய நிலையில் செல்போன் செயலியில் தேர்வு எழுதுவதை காட்டிலும் எழுத்து பூர்வமாக தேர்வை எழுத வைத்தால் எழுத்துப்பயிற்சி அளித்ததாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News