உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்ட 119 வாகனங்களுக்கு அபராதம்

Published On 2022-06-17 09:47 GMT   |   Update On 2022-06-17 09:47 GMT
  • சாலை வரி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 177 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
  • 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடி:

வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், அமர்நாத் ஆகியோர் கடந்த மே மாதம் 908 வாகனங்களை சோதனை மேற்கொண்டனர்.

இதில், 119 வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 3 லட்சத்து 47 ஆயிரத்து 440 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

மேலும், சாலை வரி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 177 ரூபாய் வசூலிக்கப்பட்டது.

மேலும், கடந்த மார்ச் 31-ந்தேதி ஆம்பூரை அடுத்த சோலூர் பகுதியில் நிகழ்ந்த விபத்தையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை சிறப்பு தணிக்கை செய்து, மோட்டார் வாகன சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிச் சீட்டு, தகுதிச் சான்று, காப்புச் சான்று புதுப்பிக்காமல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபரை விட கூடுதலாக நபர்களை ஏற்றி இயக்கப்பட்ட 10 வாகனங்களை பறிமுதல் செய்து அனுமதி சீட்டை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தொடர்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தை மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அனுமதிச் சீட்டு (பெர்மிட்) ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News