உள்ளூர் செய்திகள்

தீர்த்தக்குட ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்.

நத்தத்தில் தீர்த்த குட ஊர்வலம்

Published On 2022-09-15 06:48 GMT   |   Update On 2022-09-15 06:48 GMT
  • பண்ணுவார்பட்டி ஊராட்சி பள்ளபட்டியில் விநாயகர், அய்யனார், முத்தாலம்மன் மற்றும் மதுரை வீரன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி பக்தர்கள் பிடாரி அம்மன் கோவில் முன்பு இருந்து கோவில் காளைகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

நத்தம்:

நத்தம் அருகே பண்ணுவார்பட்டி ஊராட்சி பள்ளபட்டியில் விநாயகர், அய்யனார், முத்தாலம்மன் மற்றும் மதுரை வீரன் சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி அழகர் மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், திருமலைக்கேணி உள்ளிட்ட பல புனித ஸ்தலங்களிலிருந்துகொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி பக்தர்கள் பிடாரி அம்மன் கோவில் முன்பு இருந்து கோவில் காளைகளுடன் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து செண்டை மேளங்கள், முழங்க தீவட்டி பரிவாரங்களுடன், நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் அருகில் இருந்து பள்ளபட்டிக்கு வாணவேடிக்கையுடன் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், பண்ணுவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டிச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயபாலன், தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் மணிகண்டன், வர்த்தகர்கள் சங்க தலைவர் சேக்ஒலி, தொழிலதிபர் நல்ல மணி காந்தி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News