உள்ளூர் செய்திகள்

மூன்றாம் உலகப்போர் எப்படி?

Update: 2023-06-01 10:56 GMT
  • மூன்றாம் உலகப் போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
  • நான்காவது உலகப் போரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நான் ஒன்று சொல்ல முடியும் என்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒருமுறை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்டது:

"அணு ஆற்றலைக் கண்டுபிடித்த விஞ்ஞானியான நீங்கள், மூன்றாம் உலகப் போரில் என்ன நடக்கப் போகிறது என்பதை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.

ஐன்ஸ்டீன் கண்களில் கண்ணீர் பெருகியது.

"மூன்றாம் உலகப் போரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நான் ஒன்று சொல்ல முடியும்" என்றார்.

கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர் மிகவும் ஆச்சர்யம் அடைந்தார். அப்படியானால் "நான்காம் உலகப் போரைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று உற்சாகமாகக் கேட்டார்.

ஐன்ஸ்டீன் சொன்னார், "அது பற்றி ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்ல முடியும். அது ஒருபோதும் நடக்காது"

மூன்றாம் உலகப் போர்தான் கடைசி உலகப் போராக இருக்கும். இந்த கடைசி உலகப் போருக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அரசியல்வாதிகள் தயாராகி வருகின்றனர்.

-ஓஷோ

Tags:    

Similar News