என் மலர்

  நீங்கள் தேடியது "Kadhambam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட.
  • உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.

  இந்த "சாமி'' யார்... எந்த ஊர்... என்ன பேர்...? என்று அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது.

  பல வருடங்களுக்கு முன்னால், சின்னக்குப்பம் கிராமத்துக்கு வந்தவர், ஊருக்கு வெளியே குடிசை போட்டு தனியாக வசிக்கிறார்.

  ஊருக்குள் அவராக வரமாட்டார். விவசாய வேலைகளுக்கு கிராம மக்கள் அவரை வேலைக்கு கூப்பிடுவர்.

  ஆனால், செய்த வேலைக்காக பணமோ பொருளோ வாங்கிக் கொள்ளமாட்டார். உணவு கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார்.

  எனவே, பெயரில்லாத அவரை "சாமி" என்று பெயரிட்டு அழைக்கவும் தொடங்கினர்.

  இன்று அவரிடம் கேட்டு விட வேண்டியதுதான் என்ற முடிவோடு அந்த "சாமியை'ப் பார்க்க வந்தான் முத்து.

  அவன் அவருடைய குடிசையில் நுழைந்தபோது, சாமி ஆனந்தமாய் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார்.

  அவருடைய மாற்று உடை ஒன்றைத்தவிர குடிசையில் வேறு எந்தப்பொருளும் இல்லை.

  ஆள் நுழையும் சப்தம் கேட்டு,

  "வா, முத்து வா'' என்று அழைத்தார்.

  "சாமி, நேற்று நான் பட்டினம் போயிருந்தேன்.

  அங்கே என் உறவினர் ஒருவர் இறக்கும் தருவாயில் பட்ட கஷ்டங்ளைப் பார்த்தேன்.

  அதிலிருந்து என் மனம் கலவரமடைந்திருக்கிறது.

  நான் இறக்கும்போது அது போன்ற கஷ்டங்ளை அனுபவிக்க விரும்பவில்லை. ஆனந்தமாக இறக்க வேண்டும்.

  அதற்கு வழி ஏதேனும் இருக்கிறதா..? சொல்லுங்க சாமி,'' என்றான்.

  "அது மிகவும் எளிமையானது, ஆனால், சுலபமானதல்ல.''

  "உன்னிடம் எத்தனை மேலாடைகள் உள்ளன''...?

  "இருபதுக்கும் மேல் இருக்கும்.''

  அதில் மிகப்பழைய, விலை மிகக்குறைவான ஒன்றை எடுத்து இப்போது நான் செய்வது போல் செய்துவிட்டு நாளை வா என்றவர்,

  தன் மேலாடையைக் கழற்றித் தூக்கியெறிந்தார்.

  அதனை அவன் கண் எதிரே தீயிட்டுக் கொளுத்தினார். அதைப் பார்த்து சிரித்தார்.

  "இது என்ன பெரிய காரியம்'' என்று நினைத்த முத்து, வீட்டுக்கு வந்ததும் தன்னிடம் இருந்த பத்து வருட பழைய சட்டை ஒன்றை எடுத்தான்.

  அது பல இடங்களில் நைந்து கூட போயிருந்தது.

  அதனை தூக்கி எறியலாம் என்று நினைத்தபோது, அது அவன் பாட்டி அவனது பிறந்த நாளுக்குக் கொடுத்த பரிசு என்பது நினைவுக்கு வந்தது. அதை வைத்து விட்டான்.

  இவ்வாறாக ஒவ்வொரு ஆடையை எடுக்கும்போதும் ஒவ்வொரு ஞாபகம்...

  மறுநாள் சாமியின் கால்களில் விழுந்தான்.

  "அய்யா...., ஒரு பழைய ஆடையைக்கூட என்னால் தூக்கி எறிய முடியவில்லை. என்னை எவ்வாறேனும் காத்தருளுங்கள். இதற்காக என் குடும்பத்தைவிட்டு உங்களோடு வந்து விடவும் நான் சித்தமாயிருக்கிறேன்,'' என்றான்.

  "ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத உன்னால், இந்த உலக ஆசைகள் எனும் ஆடையை எவ்வாறு சுலபமாக கழற்றிவிட முடியும்''..?

  "பசித்திரு,

  தனித்திரு,

  விழித்திரு''

  இதுவே உனக்கான என் உபதேசம்.

  பசித்திரு என்றால் உன் ஆன்மிகப்பசியினை வளர்த்துக்கொள் என்று அர்த்தம்.

  உன் குடும்பத்தைவிட்டு என்னோடு வருவதால் மட்டும் பெரிய பயன் விளைந்து விடாது. அது தற்போது இயலாத காரியமும் கூட. உலகியல் வாழ்க்கை அனைத்திலும் ஈடுபட்டபோதும், இந்த உலகிலேயே நீ மட்டும் தனி ஒருவனாக வாழ்வது போன்ற உணர்வு நிலையில் வாழ்.

  அதுவே தனித்திரு என்பதன் பொருள்.

  "ஒரு பழைய ஆடையைக்கூட தூக்கி எறிய முடியாத நிலையில் நான் உள்ளேன். இது போன்று இன்னும் எத்தனை எத்தனை கர்மவினையின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறேனோ' என்ற விழிப்புணர்வுடன் வாழ்.

  இதுவே விழித்திரு என்பதன் பொருள்.

  இந்த மூன்று உபதேசத்தினை கடைபிடி. மற்றவை தானே நிகழும்,'' என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தார்.

  அந்த சாமி தான் வள்ளலார் பெருமகனார்.

  - நெல்லை கேசவன்  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏராள காரணங்கள் என்னைப் பேசவிடாமல் வைத்திருக்க...
  • நேற்றிரவு நண்பன் அழைத்தான் அலைபேசியில்..

  பெண்ணுக்கு செய்த

  முறைமாமன் சீரில்

  மூன்று கிராம்

  குறைந்ததற்கு

  மூக்கு சிந்தி அழுது போன

  மூத்தவள்

  இன்று வரை -

  பேசவில்லை

  சீமந்தக்காப்பு

  சின்னதாய் இருந்தது கண்டு

  கோபித்துக்கொண்ட

  சின்னவள்

  இன்றுவரை -

  பேசவில்லை

  சின்னமச்சானுக்கு கொடுத்த

  சீர்வரிசைத்தட்டில்

  இருந்த

  பட்டுவேட்டியின்

  விலை பார்த்து

  விரக்தி சிரிப்போடு போன

  பெரிய மச்சான்

  இன்றுவரை -

  பேசவில்லை

  பிறந்த அன்றே

  தன் குழந்தையை

  பார்க்க வரவில்லை என்று

  கோபித்துக்கொண்ட

  பெரிய தம்பியும்

  இரண்டு முறை

  அழைத்தும்

  அலைபேசியை

  எடுக்காத காரணஞ்சொல்லி

  சின்னதம்பியும்

  இன்றுவரை -

  பேசுவதில்லை

  மருமகளுடனான

  சண்டையில்

  நான்

  மனைவிபக்கமே இருப்பதாக

  ஒரு காரணஞ்சொல்லி

  பெற்றவளும்

  இன்றுவரை -

  பேசுவதில்லை

  அழைப்பிதழ் கொடுக்க

  நேரில் வராமல்

  அலைபேசியில் மட்டுமே

  தகவல் சொல்லி

  அழைத்த

  அவமானம் தாங்காமல்

  உறவுக்காரர்கள் பலரிடம்

  நானும் -

  பேசுவதில்லை....

  இப்படியாக...

  என்னைச் சுற்றியே

  ஏராள காரணங்கள்

  என்னைப்

  பேசவிடாமல் வைத்திருக்க...

  நேற்றிரவு

  நண்பன் அழைத்தான்

  அலைபேசியில்..

  முப்பதாண்டுகளுக்கு முன்

  பிரிந்துபோன

  நண்பர்கள் எல்லாம்

  கூடிப்பேச

  ஏற்பாடு செய்திருப்பதாக...

  இதோ நான்-

  கிளம்பிக்கொண்டிருக்கிறேன்...!

  -அழ. இரஜினிகாந்தன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
  • சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.

  நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்து சிலவற்றைச் செய்யலாம் சிலவற்றைச் செய்யக் கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும் தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்கு பொறுத்தமாக இருந்திருக்கும்.

  நாம் இன்னும் அதிகமாக ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது 'சொர்க்கம், நரகம்' என்ற இரண்டு கற்பனைகளே.

  நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்லதை கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும் அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.

  விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்றுவரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

  இன்றைக்கு என்ன வேண்டும் என்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்ற இயற்கையின் நியதியை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு சிறுவயதிலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்துவிட வேண்டும்.

  இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு தான் தயாரா? என்ற உண்மையை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.

  செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும் உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால், ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இயங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான், தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம்.

  -வேதாத்திரி மகரிஷி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
  • ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

  நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

  எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

  வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.

  வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

  எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

  வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

  இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

  வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

  தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

  நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.

  தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

  நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

  - ஆறுமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் அடிக்கடி ‘சுத்தம் செய்து விட்டேன். சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டேன். வீட்டை சுத்தமாக துடைத்து விட்டேன். பூஜை அறையை சுத்தமாக துடைத்து விட்டேன் என்று சொல்லவே கூடாது.’
  • சுத்தமாக தொடைத்து விட்டேன் என்ற வார்த்தை வீட்டை துடைத்து எடுத்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

  பொதுவாகவே நாம் பேசும் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கும்போது ஒருபோதும் தகாத வார்த்தைகளை நம் வாயிலிருந்து உச்சரிக்கவே கூடாது.

  முதலில் வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், வேலை செய்யும் இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் நாம் பயன்படுத்தக் கூடாத வார்த்தை 'இல்லை'.

  இது இல்லை, அது இல்லை, வீட்டில் மளிகை பொருட்கள் இல்லை, காய்கறிகள் இல்லை, நகைகள் இல்லை, புது துணிமணிகள் இல்லை, என்று இப்படி இல்லை இல்லை என்ற வார்த்தையை சொல்லிக்கொண்டே இருந்தால், இருப்பதும் இல்லாமல் போய்விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

  சில சமயங்களில் நாம் கேட்கக்கூடிய குறிப்பிட்ட பொருள், அந்த கடையில் இருக்காது. அப்போது அந்தக் கடைக்காரர் அந்தப் குறிப்பிட்ட பொருள் எங்களுடைய கடையில் இல்லை என்று சொல்லவே மாட்டார்கள்.

  அந்த பொருள் குடோனில் இருக்கின்றது, அல்லது அந்தப் பொருளுக்கான ஆர்டரை செய்து இருக்கின்றோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் எடுத்துவர சொல்கின்றேன். இரண்டு நாட்களில் வந்துவிடும். வந்தவுடன் இந்த பொருளை உங்களுக்கு தருகின்றேன்.' என்று தான் சொல்லுவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் எங்க கடையில அந்த பொருள் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தமாட்டார்கள்.

  இனி உங்கள் வாயிலும் இல்லை என்ற சொல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான எல்லாமும் இருக்க வேண்டும் என்றால், இல்லை என்ற வார்த்தை உங்களிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.

  அடுத்தபடியாக நமக்கு கோபம் வரும் போது அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை, சனியனே.. மூதேவி..

  இந்த இரண்டு வார்த்தைகளையும் எவர் உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களிடத்தில் கஷ்டமும் ஒட்டிக்கொள்ளும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

  சில வீடுகளில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை பார்த்து 'நீ எதற்கு பயன்பட மாட்டாய். வாழ்க்கையில் நீ கஷ்டப்பட தான் போகின்றாய்.' என்ற வார்த்தைகளை சொல்லி திட்டுவார்கள். இந்த வார்த்தைகளை வைத்து எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை திட்டவே கூடாது.

  நீ நன்றாக படித்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தான் அந்த குழந்தைகளுக்கு புத்திமதி சொல்ல வேண்டும். எதிர்பாராத விதமாக உங்களுக்கு ஏதாவது நடந்து விட்டால் கூட அம்மா என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அய்யோ என்ற வார்த்தையை உச்சரிக்கதீர்கள்.

  வீட்டில் அடிக்கடி 'சுத்தம் செய்து விட்டேன். சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டேன். வீட்டை சுத்தமாக துடைத்து விட்டேன். பூஜை அறையை சுத்தமாக துடைத்து விட்டேன் என்று சொல்லவே கூடாது.'

  சுத்தமாக தொடைத்து விட்டேன் என்ற வார்த்தை வீட்டை துடைத்து எடுத்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

  -அழகு ராஜா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.
  • புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. “இது என்ன புடவை தெரியுமா”? என்று நண்பரிடம் கேட்டார்.

  ஒரு நண்பரின் வீட்டிற்கு தமிழ் அறிஞர் கி.வா.ஜகன்நாதன் சென்றிருந்தார். நண்பர் அடுக்குமாடியில் குடியிருந்தார். புடவை உலர்த்துவதற்கு வெயில் படுகிற வகையில் வசதியான இடம் வீட்டில் இருக்கவில்லை... வாசல் பக்கத்தில் தான் வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

  நண்பரின் மனைவி வாசல் கதவைத் திறந்து வைத்து, வெயில்படும்படியாக துவைத்த புடவையை அதன் மேல் காயப்போட்டிருந்தார்.

  புடவையைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்த கி.வா.ஜ. "இது என்ன புடவை தெரியுமா"? என்று நண்பரிடம் கேட்டார்.

  "ஏன் இது சாதாரண புடவைதானே!" என்றார் நண்பர்.

  "இல்ல... இந்த புடவைக்கு ஒரு விஷேச சிறப்பு உண்டு. இது தான் உண்மையான வாயில் புடவை" என்றார் கி.வா.ஜ.

  -பே.சண்முகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
  • புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

  அசோக சக்கரவர்த்தி குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

  போரே வேண்டாம்…

  போரோ மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம் .

  இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

  அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

  ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

  'எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!' என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

  அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

  "மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்றார் மன்னர்.

  நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

  ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

  புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

  ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

  மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் அமைச்சரிடம், "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்," என்றார்.

  மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

  புலியின் தலையை ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

  இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது.

  அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

  மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

  "அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்", என்றார் மன்னர்.

  ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக்கொள்ள யாருமே முன் வரவில்லை.

  விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

  "மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?" என்றார்.

  அமைச்சர் மவுனம் காத்தார்.

  "மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா…

  ஆனால் நடைமுறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

  இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது!

  செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.

  ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!" என்றார்.

  அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

  - ஆனந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
  • ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு.

  ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீரே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம்.

  வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

  சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

  சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

  இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

  ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

  பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

  இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்!

  -அம்ரா பாண்டியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம்.
  • இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு.

  புலிகள் இருக்கும் காடுகளில் மனிதன் நடமாட்டம் இருக்காது. அதனால் மரங்கள் வெட்டப்படமாட்டாது. மரங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்போது பறவை முதல் அனைத்து விலங்குகளும் அங்கே வாழத்தொடங்கும். இது ஒரு சங்கிலி தொடர்போல் இருக்கும். ஒன்றை ஒன்று சார்ந்தது.

  காடுகளை நம்மை சுற்றியிருக்கும் அரண்போல மனதில் நிறுத்திப் பாருங்கள். இந்தக் காடுகள் இன்றுவரை பிழைத்திருக்க புலிகளே காரணம். இல்லை என்றால் என்றோ அழித்து ஒழித்து இருப்போம். நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல், காற்று வரை காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது.

  ஒரு புலி ஒரு வருடத்தில் சுமார் 45 முதல் 55 வரையிலான இரை விலங்குகளை உணவாகக்கொள்ளும். இரை விலங்குகளின் எண்ணிக்கையை சரியான அளவில் வைத்திருக்க கொன்றுண்ணிகள் பெரும் உதவி செய்கின்றன. இரை விலங்குகள் பெருகி, வேட்டை விலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் காடுகளின் தரம் வெகுவாக குறையும். இறுதியில், அனைத்தையும் இழக்க வேண்டி வரும். சமநிலை இருப்பது மிக முக்கியம்.

  வனத்தில் புலிகளின் இயற்கையான இரை விலங்குகள் குறையும் போது மேய்ச்சலுக்கு வரும் மாடுகளை வேட்டையாடுவது நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இரை விலங்குகள் குறைய மனிதர்கள் வேட்டையாடுவது, வனத்தின் இயல்பான சூழல் மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை என சில காரணங்கள் உண்டு. இது போன்ற காரணங்களால் உணவில்லாமல், வேறிடம் செல்லவும் வழி இல்லாமல் ஒரு பகுதியில் உள்ள மொத்த புலிகளும் தனிமைப்பட்டு முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகலாம்.

  அழிந்து போனால் என்ன.. நல்லது தானே என்று நீங்கள் நினைத்தால், உங்களை சுற்றியுள்ள வனங்கள் தங்கள் இயல்புகளை இழந்து விட்டன என்பதையும் மனதில் கொள்ளுங்கள். வனத்தின் இயல்புகள் தொலைந்தால் அது நம் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

  -ஆற்றல் பிரவீன்குமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும்.
  • சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

  பூமியின் அருமை பலருக்கும் தெரியாது. பூமியை விட்டுக் கிளம்பி வேறு கிரகங்களுக்குப் போய் பார்த்திருந்தால் ஆகா, நம் பூமி சொர்க்கம் போன்றது என்று கூறுவோம். ஆனால், மனிதன் இதுவரை பூமியை விட்டு வேறு எந்த கிரகத்துக்கும் சென்றது கிடையாது. சந்திரனுக்கு மனிதன் போயிருக்கிறான். ஆனால், சந்திரன் ஒரு கிரகம் அல்ல. சந்திரன் நமது பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி.

  இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவும் ரஷ்யாவும் அனுப்பியுள்ள ஆளில்லா விண்கலங்கள் சூரிய மண்டலத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் ஆராய்ந்து தகவல்களை அளித்துள்ளன.

  மனிதன் என்றாவது ஒருநாள் போய், தங்கி வாழக்கூடிய ஒரு கிரகம் உண்டு என்றால் அது செவ்வாய் கிரகம்தான். ஆனால் நீங்கள் செவ்வாய் கிரகத்தில் போய் இறங்கினால் இயல்பாக சுவாசிக்க முடியாது.

  செவ்வாயில் காற்று மண்டலம் உண்டு. ஆனால் அந்தக் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்சைடு வாயுதான் அதிகம். மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயு மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. எனவே, ஆக்சிஜன் அடங்கிய குப்பியை முதுகில் கட்டிக்கொண்டு, மூக்கில் குழாயை மாட்டிக்கொண்டுதான் நடமாட வேண்டும்.

  செவ்வாயில் தண்ணீர் கிடையாது. அங்குமிங்கும் கிடைக்கும் ஐஸ் கட்டியை உருக்கிப் பயன்படுத்தியாக வேண்டும். விருப்பம்போல நடமாட முடியாது. விண்வெளியிலிருந்து பயங்கர வேகத்தில் வரும் விண்கற்கள் எந்த நேரத்திலும் தலை மீது வந்து விழலாம். தவிர, விசேஷ காப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும். சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்கள் தாக்கலாம்.

  இப்படியெல்லாம் இருந்தும் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. செவ்வாயின் கதை இப்படி என்றால் சூரியனுக்கு மிக அருகே உள்ள புதன் கிரகத்துக்குப் போவது பற்றிச் சிந்திக்கவே முடியாது. பகலில் 427 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் வெயில். இரவில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கடும் குளிர்.

  பூமியிலிருந்து பார்த்தால் பிரகாசமாகத் தெரிகிற வெள்ளி கிரகத்திலும் கடும் வெப்பம். அத்துடன் அங்கு காற்று மண்டல அடர்த்தி மிக அதிகம். விண்கலம் போய் இறங்கினால் அப்பளம்போல நொறுங்கிவிடும். சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் கடும் குளிர் நிலவும் வாயு உருண்டைகள். நிலம் என்பதே கிடையாது.

  பூமியானது சூரியனிலிருந்து தகுந்த தூரத்தில் (15 கோடி கிலோ மீட்டர்) உள்ளது. எனவே, புதன் கிரகத்தில் உள்ளது போல கடும் வெயில் இல்லை. பூமியில் போதுமான ஆக்சிஜன் அடங்கிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீரும் உள்ளது. எனவே, பூமியில் உயிரினம் சாத்தியமானது. செவ்வாய் போல இல்லாமல் பூமியானது தகுந்த பருமன் கொண்டது. எனவே, அது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. வடிவில் சிறியது என்பதால் செவ்வாய் தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது.

  பூமியின் காற்று மண்டலமானது சூரியனிலிருந்தும் விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்களைத் தடுத்து விடுகிறது. பூமிக்கு காந்த மண்டலம் உள்ளது. அதுவும் இதுபோன்ற கதிர்களைத் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வரும் விண்கற்கள் பூமியின் காற்று மண்டலம் வழியே வரும்போது தீப்பிடித்து அழிந்துவிடுகின்றன. செவ்வாய் கிரகத்தில் அப்படி இல்லை.

  பூமி தனது அச்சில் தகுந்த வேகத்தில் சுழல்கிறது. அதனால் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. புதன் கிரகத்தில் பகல் என்பது மிக நீண்டது. இரவும் அப்படித்தான். செவ்வாயிலும் பூமியைப் போல ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரம். ஆனால், பூமியுடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ளது. எனவே, குளிர் அதிகம்.

  பூமியின் காற்று மண்டலம் தகுந்த அடர்த்தி கொண்டது என்பதால் பூமியில் தண்ணீர் இருக்கிறது. உயிரின வாழ்க்கைக்குத் தண்ணீர் மிக அவசியம். செவ்வாய் கிரகத்தில் என்றோ தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதற்கான தடயங்கள் உள்ளன. ஆனால், இன்று செவ்வாயில் தண்ணீர் இல்லை.

  பூமியானது இயற்கையாக இதுபோன்ற பல சாதக நிலைகளைப் பெற்றுள்ளதால்தான் பூமியில் மனிதனும் பலவகையான விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், தாவரங்களும் வாழ முடிகிறது. அந்த அளவில் சூரிய மண்டலத்தில் பூமி ஒன்றுதான் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

  -அருண் நாகலிங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு.
  • புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

  மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் ஞானேந்திரியங்கள் ஆகும். இந்த ஐந்து புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள், உண்டு.

  பரிணாமத்தில் கடைசிப் புலனாக, ஆறாவது புலனாக வந்தது மனமாகும். மற்ற ஐந்து புலன்களின் வேலைகளையும் தானே தனித்து ஒருங்கே செய்ய ஏற்பட்ட முழுமையான புலன் மனமே ஆகும்.

  ஐம்புலன்களுக்கும் உடலில் ஐந்து இடங்கள் இருப்பது போலவே, மனதுக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட இடம் உண்டு. அது புருவ மத்தியாகும். அதற்கு லலாடம், திருநாடு, சிற்றம்பலம், சிற்சபை எனப் பல பெயர்கள் உண்டு.

  மனமானது தனக்கான இருப்பிடத்தை விட்டு எப்போதும் ஐம்புலன்களைப் பற்றி வெளியே ஓடிய வண்ணம் இருக்கிறது. ஆம். ஒவ்வொரு வினாடியும் மனம் வெளியே ஓடி ஏதாவது ஒன்றைப் பற்றிய வண்ணமே இருக்கிறது. இதுவே மனதின் இயல்பு.

  -தென்னம்பட்டு ஏகாம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
  • முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

  உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்?

  பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது...

  ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

  ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

  ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

  ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

  முக்கியமாக, பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

  கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

  இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

  மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

  ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

  முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

  அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

  அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

  அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... 'டியூஷன்'என்ற அருவருப்பான கலாச்சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

  தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

  "இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

  உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

  மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

  ×