உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2022-08-19 04:29 GMT   |   Update On 2022-08-19 04:29 GMT
  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீ டிப்பதால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.
  • அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பதால் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது.

மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒனேக்கல்லில் பரிசல் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஆற்றில் குளிக்க மட்டும் தடை நீடிக்கிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 600 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என மொத்தம் 20 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீ டிப்பதால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பதால் இனி வரும் நாட்களிலும் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட உள்ளது.

Tags:    

Similar News