உள்ளூர் செய்திகள்

ஜெயமணி

விபத்தில் சிக்கி மூளைச்சாவு: 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த பெண்

Published On 2022-06-11 05:11 GMT   |   Update On 2022-06-11 05:11 GMT
  • மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.
  • உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மோடமங்கலம் அருகே மேல்பாறை காடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஜெயமணி (வயது 52).

இவர்களுக்கு மல்லிகா என்ற மகளும், பூபதி என்ற மகனும் உள்ளனர். மல்லிகா கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி மல்லிகா வீட்டுக்கு வருவதற்காக தாயார் ஜெயமணியும், சகோதரர் பூபதியும் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

சின்னியம்பாளையம் அருகே வந்தபோது 4 சக்கர வாகனம் அவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயமணியும், பூபதியும் தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ஜெயமணி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 9-ந் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெயமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் பெருமாள் மற்றும் குடும்பத்தினர் முன் வந்தனர்.

அதன்படி ஜெயமணியின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. இதன் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News