உள்ளூர் செய்திகள்

போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் பணிபுரிந்த 210 ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்ப பெற்றது

Published On 2022-07-01 10:46 GMT   |   Update On 2022-07-01 10:46 GMT
  • ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீஸ்காரர்களை பணி அமர்த்த கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.
  • அதை மீறி ஆர்டர்லி முறை செயல்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. ஆர்டர்லிகளை வைத்திருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

சென்னை:

தமிழக காவல்துறையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணிகளை செய்ய அதிகாரப்பூர்வமற்ற முறையில் போலீஸ்காரர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதற்கு ஆர்டர்லி என்று பெயர்.

இந்த ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீஸ்காரர்களை பணி அமர்த்த கூடாது என்றும் சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

அதை மீறி ஆர்டர்லி முறை செயல்பட்டு வருவதாக சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. ஆர்டர்லிகளை வைத்திருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.

இந்த நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளை பணி யமர்த்தப்பட்டு இருந்த 210 போலீஸ்காரர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது.

Tags:    

Similar News