உள்ளூர் செய்திகள்

போதை ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

கூத்தப்பாடியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2022-08-10 10:14 GMT   |   Update On 2022-08-10 10:14 GMT
  • போதை பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறினார்.
  • பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் ஒகேனக்கல் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், தேவராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News