உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பூம்புகார், குமரிக்கண்டம் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து கருத்தரங்கம்

Published On 2022-08-09 04:57 GMT   |   Update On 2022-08-09 04:57 GMT
  • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் சில புதிய கண்டுபிடிப்புகள்” எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கம்நடைபெற்றது.
  • விழாவில் பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

சின்னாளபட்டி:

சின்னாளபட்டியில் உள்ள காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் புவிசார் தகவல் தொழில்நுட்பவியல் மையத்தின் (ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மையம்) சார்பில் பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் சில புதிய கண்டுபிடிப்புகள்" எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கம்நடைபெற்றது.

காந்திகிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி, டிஜிட்டல் பூம்புகார் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்ககைத்தின் தொலையுணர்வு துறையின் முன்னாள் துறைத்தலைவர் மற்றும் நிறுவனர் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கத்தில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள சில பாடல்களின் அடிப்படையிலும் காவிரி ஆற்றின் பாதையின் அடிப்படையிலும், செயற்கைக்கோள் தொலையுணர்வு படங்களை கொண்டும் மேற்கொண்ட ஆய்வின் தொகுப்பாக அவரது உரை இருந்தது. சங்க கால இலக்கியத்தில் குறிப்பிட்ட இடங்களின் தடங்களையும், பழைய பூம்புகார் இருந்தற்கான தடயங்களையும் செயற்கைக்கோள் தொலையுணர்வு (கடலுக்கு அடிகளில் எடுக்கப்பட்ட புகை படங்களை கொண்டு படச் செயலாக்கம் மூலம் விளக்கி கூறினார்.

இதன் மூலம் இந்தியாவின் தொன்மை 15000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்பதையும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தினார். இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களான தேர்வு கட்டுப்பாட்டு துறை பொறுப்பு தலைவர் ஆனந்தராஜாகுமாரி தலைமை உரையும், கிராமப்புற சுகாதாரம் மற்றும் மேம்பாட்டுத் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் வாழ்த்துறையும் வழங்கினர்.

விழாவினை ஏற்று நிகழ்த்திய ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மைய இயக்குனர் பொறுப்பு முத்துக்குமார் வரவேற்புரையும், கவுரவ விரிவுரையாளார் எழிலரசன் நன்றி உரையையும் வழங்கினர். விழாவில் பல்கலைக்கழக மாணவர்களும் மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News