உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ரூ.1.17 கோடி மானியம்

Published On 2022-09-21 08:53 GMT   |   Update On 2022-09-21 08:53 GMT
  • தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்.
  • 800 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கான 800 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1.17 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சாகுபடி செய்யாமல் தரிசாக இருக்கும் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் தரிசாக இருக்கும் நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றவும் மேலும் அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து சிறுதானியங்கள், பயிறு வகைகள், விதைத்து அதை விளை நிலங்களாக மாற்ற ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 13 ஆயிரத்து 500 மானியமும் நிலக்கடலை பயிருக்கு 22 ஆயிரத்து 900 மானியமும் வழங்கப்படுகிறது.

தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன் செய்வதற்கும், உழவு பணி மேற்கொள்வதற்கும், மற்றும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல திட்டம் ஆகும். சாகுபடி மேற்கொள்ளப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் தங்கள் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெற முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News