உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன் பெரியசாமி சாலைபணிகளை ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடியில் சாலை அகலப்படுத்தும் பணி - மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Published On 2023-08-01 08:46 GMT   |   Update On 2023-08-01 08:46 GMT
  • செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • ஆய்வின்போது பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்டேட் பேங்க் காலனி பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் புதிய சாலை பணிகள், செல்வநாயகபுரம் பகுதியில் புதிய வடிகால் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேயர் ஆய்வு

இந்தப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் முறையாக மேற்கொள்ள ப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது தி.மு.க. வட்ட செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன், கவுன்சிலர் சந்திரபோஸ், வட்ட செயலாளர் முனியசாமி, மாநகராட்சி அதிகாரிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மனிதாபிமான உதவி

ஆய்வின்போது மேயருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பனிமய மாதா கோவில் திருவிழாவுக்கு ஊசி, பாசி விற்க வந்த நரிக்குறவர் இன முதியவர் செல்லப்பா (வயது80) என்பவர் ஜார்ஜ் ரோட்டில் திடீரென காலமானார். அவரது மனைவி இந்திரா தனது சொந்த ஊரான வள்ளியூருக்கு தன் கணவர் உடலை கொண்டு செல்வதற்கு அங்கு இருப்பவர்களிடம் உதவி கேட்டுக் கொண்டி ருப்பதாகவும், இதை பார்த்த தான் தகவலை தெரிவிப்பதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி அந்த முதியவரின் உடலை கொண்டு செல்ல நடவடிக்கை மே ற்கொண்டார். இதனையடுத்து மேயரின் சொந்த செலவில் தனியார் ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அந்த முதியவரின் உடலை ஏற்றி வள்ளியூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News