உள்ளூர் செய்திகள்

சமத்துவ முளைப்பாரி விழா

Published On 2022-10-07 07:57 GMT   |   Update On 2022-10-07 07:57 GMT
  • ராமநாதபுரம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சமத்துவ முளைப்பாரி விழா நடந்தது.
  • 7 நாட்களும் இரவில் ஒயிலாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி உற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுடன் தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று 7 நாட்களும் இரவில் ஒயிலாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு முளைப்பாரி வளர்க்கும் இடத்தில் இருந்து எடுத்துச் சென்று பெண்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவிலை சென்றடைந்தனர். காலை முதல் இளைஞர்கள் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடந்தது. கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக முளைப்பாரியை பெண்கள் தலையில் சுமந்து நீர் நிலையில் கரைத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தியாகவன்சேரி அனைத்து சமுதாய தலைவர்கள், இளைஞர்கள், மகளிர் அணியினர் செய்தனர்.

Tags:    

Similar News