உள்ளூர் செய்திகள்

முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டபோது எடுத்தபடம்.


விளாத்திகுளம் அருகே பனைமர தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2022-09-26 08:52 GMT   |   Update On 2022-09-26 08:52 GMT
  • விளாத்தி குளத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.
  • தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

தூத்துக்குடி:

சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் விளாத்தி குளம் ஒன்றியம் கு. சுப்பிரமணியபுரத்தில் பனைமர தொழிலாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.

ஊர் தலைவர் அரிபாகரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஞான சேகர், சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ் குமார், துணைச் செயலாளர் மில்லை தேவராஜ், வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் சுந்தர், காமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News