உள்ளூர் செய்திகள்

சம்பவ இடத்தில் திரண்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

சேலம் அருகே பெயிண்டிங் தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-01-20 09:36 GMT   |   Update On 2023-01-20 09:36 GMT
  • தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.
  • இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி கிராமம் கரட்டூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகில் ஓடும் சரப்பங்கா நதியில் இன்று காலை 6 மணியளவில் ஆண் உடல் ஒன்று மிதந்தது.

இதை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது பேண்ட், சட்டையை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை கைப்பற்றினர்.

சேலத்தை சேர்ந்தவர்

விசாரணையில் அவர், சேலம் எருமாபாளையம், களரம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி- வசந்தி தம்பதியரின் மகன் சங்கர் (வயது 38) என்பதும், திருமணம் ஆகாதவர் என்பதும் தெரியவந்தது. இவர் கடந்த 2 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து தனியாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்துள்ளார் என்பதும், இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளதும் தெரியவந்தது.

சங்கர் பிணமாக மிதந்த இடத்தின் அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இதனால் சங்கர் மதுகுடிக்க வந்த இடத்தில் போதையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சங்கர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News