உள்ளூர் செய்திகள்

கலெக்டர் விஷ்ணு

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் 2-ந் தேதி கிராமசபை கூட்டம்- நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தகவல்

Published On 2022-09-30 09:25 GMT   |   Update On 2022-09-30 09:25 GMT
  • ஆண்டுதோறும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.
  • கூட்டத்தில் முக்கிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டங்கள் ஆண்டுதோறும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், உலக தண்ணீர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையால் நடத்தப்படுகிறது.

கிராம சபை கூட்டங்களில் வேளாண்-உழவர் நலத்துறை திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்து ரைக்கவும், காட்சிப்படுத்த வும், பயனாளிகள் பட்டியலை பார்வைக்கு வைத்திடவும் அரசாணை நிலை எண்.41 வேளாண்மை இணை இயக்குநர்களை கிராம சபைக்கூட்ட நிகழ்வினை வேளாண்மைத்துறை மற்றும் அதன் சகோதர துறைகளுடன் ஒருங்கிணைந்து நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் விவசா யிகளுக்கு வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.

கூட்டத்தில், வேளாண்மை- உழவர் நலத்துறையின் உழவன் செயலி பற்றிய பயன் பாட்டினை எடுத்துரைத்து, தேவைப்படும் விவசாயி களுக்கு பதிவிறக்கம் செய்தும் கொடுக்கப்பட உள்ளது.

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்களை இணைக்கும் அவசியத்தை எடுத்துக்கூறி அத்திட்டப் பயன்களை தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத் துக்களில் நாளை மறுநாள்

2-ந் தேதி ( ஞாயிற்றுக் கிழமை) நடை பெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை- உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பயன்களை அறிந்து கொண்டு பயன் பெற கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News