உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.

தருமபுரி நகர போலீஸ் நிலையம் சார்பில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி

Update: 2022-06-27 08:12 GMT
  • ஹெராயின் புகை மரணத்திற்கு குகை, போதைப்பொருள் ஒரு பிரகாசமான திறமையுள்ள துடிப்பான இளைஞர்களை மந்தமானவர்களாக மாற்றுகிறது.
  • போதைப் பொருட்கள் மலட்டுதனத்திற்கும் ஆண்மையின்மைக்கும் காரணமாகிறது.

தருமபுரி, 

தருமபுரி நகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தருமபுரி மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராமச்சந்திரன், பேரணியை தொடங்கி வைத்தார்.

தருமபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ், மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர மூர்த்தி, பெருமாள், பாலசுப்ரமணியம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, மற்றும் போலீசார் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி 4 ரோட்டில் தொடங்கி, நேதாஜி பைபாஸ் சாலை, கணேஷ் தியேட்டர், தலைமை தபால் நிலையம், ராஜகோபால் பூங்கா, பேருந்து நிலையம், மீன் மார்க்கெட், மீண்டும் 4 ரோட்டில் வந்து முடிந்தது.

போதை பழக்கத்திற்கு அடிமை ஆகாதீர்கள், கஞ்சா சுடுகாட்டிற்கு வழிகாட்டி, அபின் அழிவின் ஆதி பெயர், ஹெராயின் புகை மரணத்திற்கு குகை, போதைப்பொருள் ஒரு பிரகாசமான திறமையுள்ள துடிப்பான இளைஞர்களை மந்தமானவர்களாக மாற்றுகிறது. போதைப் பொருட்கள் மலட்டுதனத்திற்கும் ஆண்மையின்மைக்கும் காரணமாகிறது.

போதை அடிமைகள் வாழ்க்கை, உறவுகளற்று போவதனால் வாழ முடியாத வர்களாக ஆகின்றனர். போதைப்பழக்கம் நேர்மையும், ஒழுக்கமும் அற்ற வாழ்க்கை பாதைக்கு அழைத்துச் செல்கிறது. போதையுடன் பயணம் வாழ்க்கையின் இறுதி பயணம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் உள்ள துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Similar News