உள்ளூர் செய்திகள்

வெள்ளத்தால் பாதிப்படைந்ததை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வெள்ளத்தால் பாதித்த பயிர்களை அதிகாரி ஆய்வு

Published On 2022-08-09 10:25 GMT   |   Update On 2022-08-09 10:25 GMT
  • வெள்ளம் வடிந்தவுடன் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும்.
  • தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று வழங்கப்படும்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் மற்றும் உள்ளிக்கடை கிராமத்தில் வெள்ளத்தால் சூழ்ந்து மூழ்கியுள்ள வாழை, மிளகாய், வெண்டை, செண்டி பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீரில் மூழ்கிய பயிர்களின் விவரங்களை விவசாயிகளிடம் கேட்ட றிந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்க ளில் பாதிக்கப்பட்ட தோட்ட க்கலை பயிர்களை ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது : பயிர்களை சூழ்ந்துள்ள வெள்ளம் வடிந்தவுடன் சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கையாக தயார் செய்து மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்படும். பின்னர் சேத விவரங்கள் கலெக்டர் மூலம் சென்னையில் உள்ள தோட்டக்கலை இயக்குனருக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது பாபநாசம்தோட்ட க்கலைத்துறை உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, பாபநாசம் உதவி தோட்ட க்கலைதுறை அலுவலர்கள் வரதராஜன், காந்தி, முரளி, கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இள ங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News