உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சிமஸ்தான் வழங்கினார்.

மேல்மலையனூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்

Published On 2022-07-02 06:35 GMT   |   Update On 2022-07-02 06:35 GMT
  • மேல்மலையனூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார்.

விழுப்புரம்:

மேல்மலையனூர் தாலுக்கா வளத்தி ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் மகாராணி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 203 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வகுமார், மண்டல துணை வட்டாட்சியர் நாராயணமூர்த்தி, துணைசேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுண்சிலர் செல்வி இராமசரவணன்,ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயணமூர்த்தி, ஷாகின் அர்ஷத், பெருமாள், சக்தி, யசோதைரை சந்திரகுப்தன், ஜெயந்திஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெய்சங்கர், துணைத்தலைவர் கோவிந்தன்,வருவாய்ஆய்வாளர்கள்சுதாகர், ஏழுமலை, தஸ்தகீர்,நிர்வாகிகள் சரவணன், எஸ்.பி.சம்பத், குமார் மணிகண்டன், கந்தவேல், தேவனூர் ஆறுமுகம், பெருவளூர் பாபு, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News