உள்ளூர் செய்திகள்

சேதம் அடைந்து காணப்படும் மிளகாய் செடிகள்.


கல்லிடைக்குறிச்சி அருகே பூச்சிக்கடியால் 100 ஏக்கரில் பயிரிட்ட மிளகாய் செடி சேதம்- நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-08-14 09:06 GMT   |   Update On 2022-08-14 09:06 GMT
  • கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது.
  • ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியில் தற்போது மிளகாய் சாகுபடி கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது கண்ணுக்குத் தெரியாத செல்களினால் மிளகாய் செடிகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்..

ஜமீன் சிங்கம்பட்டி பகுதியில் தற்போது மிளகாய் பயிர் கூடுதலாக பயிரிடப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு, உரம், ரசாயனம் உரம், தொழிலாளி கூலி என ஏக்கருக்கு 1½ லட்சம் வரை செலவு செய்துள்ளோம்.

ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மிளகாய் கிடைக்கும், 100 ஏக்கர் வரை விவசாயிகள் மிளகாய் பயிர் செய்துள்ளனர்.

தற்போது கண்ணுக்கு தெரியாத வகையில் கருப்பு, வெள்ளை நிற செல்கள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.

இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளோம்.வேளாண் துறையினர் போதிய மருந்துகள் வழங்கப் படவில்லை. பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News