உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே பைக் மோதி ஆட்டோ மொபைல் உரிமையாளர் சாவு

Update: 2022-10-06 09:55 GMT
  • அந்த வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக சுரேஷ் மீது மோதியது.
  • சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). இவர் ஆட்டோ மொைபல் நடத்தி வந்தார்.

நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் தருமபுரியில் இருந்து அரூருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது குரும்பட்டி பகுதியில் வந்த ேபாது அந்த வழியாக வந்த மற்றொரு பைக் எதிர்பாராதவிதமாக சுரேஷ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News