உள்ளூர் செய்திகள்

குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு

Published On 2023-11-23 06:38 GMT   |   Update On 2023-11-23 06:38 GMT
  • சோழவந்தான் அருகே குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
  • கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சோழவந்தான்

சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் ஊராட்சியில் உட்பட்ட கீழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில்அந்த ஏற்பாட்டை ஒருசிலர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீருக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்தஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னரும் குடிநீர் கிடைக்க வழியில்லாமல் கீழப்பட்டி கிராம மக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

தனி நபர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News