உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீசு

Published On 2022-07-19 08:54 GMT   |   Update On 2022-07-19 08:54 GMT
  • அனுமதியின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.
  • அனுமதி பெறாத பள்ளிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

மதுரை

மதுரையில் அனுமதியின்றி செயல்படும் மழலையர் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு முதன்மை கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் தனியார் மழலைப் பள்ளிகள் அரசு அனுமதி இன்றி நடத்தப்படுவதாக புகார் அளித்துள்ளது. இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் அனுமதி இன்றி செயல்படும் மழலை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 70% மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எத்தனை மழலையர் பள்ளிகள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது, அதில் எத்தனை அங்கீகாரம் பெற்றுள்ளன எந்த விவரங்களை முதன்மை கல்வி அலுவலகம் ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறது.

சுமார் 70 சதவீத பள்ளிகள் உரிய அனுமதி இன்றி செயல்படுவதால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் விளக்கம் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். அனுமதி பெறாத பள்ளிகள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

Tags:    

Similar News