உள்ளூர் செய்திகள்

சோழவந்தானில் அ.தி.மு.க. மாநாட்டு லோகோவை ஆட்டோவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒட்டினார். அருகில் நிர்வாகிகள் வெற்றிேவல், எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்: ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-08-09 09:38 GMT   |   Update On 2023-08-09 09:38 GMT
  • மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கிறார்.
  • ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

மதுரை

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறு கிறது. இந்த மாநாட்டிற்காக பொதுமக்களை அழைக்கும் வண்ணம் அம்மா பேரவை யின் சார்பில் மரக்கன்று கொடுத்தும், வாகனங்களில் மாநாட்டிற்கான லோகோவை ஒட்டும் நிகழ்ச்சி சோழவந்தானில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் லோகோவை ஒட்டி, மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

எடப்பாடியார் தலைமையில் மாநாட்டிற்காக பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லந்தோறும் இலைமலர மரக்கன்று வழங்கியும், மாநாட்டிற்கான விளம்பர லோகோவையும் இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி அம்மா பேரவையின் சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் 10 லட்சம் மக்களை பங்கேற்க செய்யும் வகையில ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புரட்சித் தலைவருக்கு பின்பு இந்த இயக்கத்தை புரட்சித் தலைவி அம்மா வழி நடத்தினர். அம்மாவிற்கு பின்பு இந்த இயக்கம் என்ன ஆகுமோ? என்ற நினைத்த போது, எடப்பாடியார் இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தினார்.

மதுரை மாநாட்டிற்கு பங்கேற்கும் லட்சக் கணக்கான மக்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது ஒவ்வொரு தொகுதிகளும் மூத்த நிர்வாகிகளை தேர்வு செய்யப்பட்டு அவர்களை எடப்பாடியார் கவுரவிக்கிறார்.

இன்றைக்கு 100 நாட்களில் 2 கோடியே 44 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்து மகத்தான சாதனையை எடப்பாடியார் படைத்துள்ளார்.

இந்த மாநாடு மீண்டும் எடப்பாடியார் தமிழகத்தின் முதல்வராக வரும் கால்கோள் விழாவாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News