உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உருவாகும் புதிய மண்டபத்தின் மாதிரி தோற்றம்.

குலசேகரன்பட்டினத்தில் நாளை முத்தாரம்மன் கோவில் புதிய மண்டப அடிக்கல் நாட்டு விழா

Published On 2022-06-13 09:29 GMT   |   Update On 2022-06-13 09:29 GMT
  • குலசேகரன்பட்டினத்தில் நாளை முத்தாரம்மன் கோவில் புதிய மண்டப அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
  • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும் கோவில் ஆகும்.

இக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முக பெருமாள் நாடார்- பிச்சுமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அவரது மகன் ராமசாமி கோவில் முன்மண்டபம் நன்கொடையாக கட்டிக் கொடுக்கிறார்.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து கோவிலில் நடைபெறும் பவுர்ணமி திருவிளக்கு பூஜையிலும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பக்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுசெல்லு மாறு தண்டுபத்து ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News