உள்ளூர் செய்திகள்

குளித்தலையில் ஆதர்ஷ் அங்கன்வாடி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்

Published On 2022-10-01 09:50 GMT   |   Update On 2022-10-01 09:50 GMT
  • குளித்தலையில் ஆதர்ஷ் அங்கன்வாடி திட்டத்தின் கீழ்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
  • இந்த திட்டமானது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒவ்வொரு கிரா மத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று வழங்கப்படும்

கரூர்,

இந்திய பிரதமர் மோடியின் ஆதர்ஷ் அங்கன்வாடி அபி யான் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், குளித்தலை, கடம்பர் கோவில் பகுதியில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகள், கர்ப்பிணிபெண் களுக்கு ஆப்பிள், ஆரஞ்சு,வாழைப்பழம், கொய்யா, வேர்க்கடலை, மாவுப்பொருட்கள் அடங்கிய ஊட்ட சத்து பொருட்களை பா.ஜ.க. மாநில மகளிர் துணைத்தலைவி அணி மீனா வினோத்குமார் வழங்கினார்.

மேலும் அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையலறையில் உணவுப்பொருட்கள், சுகாதாரம், கழிவறை வசதி, குடிநீர்வசதிகள் போன்றவை அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த திட்டமானது ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒவ்வொரு கிரா மத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் குளித்தலை நகர தலைவர் கணேசன், பொதுச் செயலாளர், ஸ்ரீதர் ராசப்பா, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ரம்யா மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News