உள்ளூர் செய்திகள்

கரூரில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 15 கடைகளுக்கு சீல்

Published On 2022-06-19 08:38 GMT   |   Update On 2022-06-19 08:38 GMT
  • கரூர் மாவட்டத்தில் காவல் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியதில் 27 வழக்குகள் பதிவு செய்து சுமார் 83 கிலோ எடையுள்ள ரூ.76,084 மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றி தொடர்புள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
  • குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 15 கடைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவல் துறையினர் 2 நாட்கள் சோதனை நடத்தியதில் 27 வழக்குகள் பதிவு செய்து சுமார் 83 கிலோ எடையுள்ள ரூ.76,084 மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றி தொடர்புள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 15 கடைகளை உணவு பாதுகாப்பு துறை மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக பொதுஇடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றின் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஏ.சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News