உள்ளூர் செய்திகள்

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்

Published On 2022-07-12 09:49 GMT   |   Update On 2022-07-12 09:49 GMT
  • பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
  • பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

கரூர்:

கடவூர் வட்டம், மணக்காட்டு நாயக்கனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாம்பலம்மன், முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீரை எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் புனிதநீரை யாகசாலையில் வைத்து முதல் காலபூஜை, இரண்டாம் காலபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News