உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-13 09:59 GMT   |   Update On 2022-07-13 09:59 GMT
  • அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்
  • உணவு தரமாக உள்ளதா என்று சாப்பிட்டு பார்த்தார்

கரூர்:

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வதியம் ரேஷன் கடை, குளித்தலை நகராட்சி பகுதியிலுள்ள அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொது மக்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து பதிவேடுகளிலுள்ள பதிவுகளின்படி உணவு பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார்.

மேலும், குளித்தலை நகராட்சி பகுதியிலுள்ள கடம்பர் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் இரு அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை பதிவேடுகளை பார்வையிட்டார்.

மேலும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்ட கலெக்டர், குளித்தலை காவேரி நகரில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதிகளிலும் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News